Header Ads



பயங்கரவாத மனோநிலையிலிருந்து கருணா வெளிவரவில்லை, அவரது விசுவாசம் புலிகள் பக்கமேயிருந்தது

விநாயகமூர்த்தி முரளீதரனிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தின் போது அரசதரப்புடன் சேர்ந்த போதிலும் அவர் உரிய ஆதரவை வழங்கவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் அரசாங்கத்துடன் இணைந்திருந்த போதிலும் அவரது விசுவாசம் விடுதலைப்புலிகள் பக்கமேயிருந்தது எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மான் விடுதலைப்புலிகள் குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை இராணுவத்தினரிற்கான வலிமையை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து 150 பேர்வந்தனர் அவர்களில் 80 பேர் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருணா அவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்றால் அவர் பயங்கரவாத மனோநிலையிலிருந்து வெளிவரவில்லை என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இதன் காரணமாக அவருக்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.