Header Ads



இனவெறிக்கு எதிரான, கருப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டத்தில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம்


அமெரிக்காவில் மரணமடைந்த கருப்பினத்தவருக்கு ஆதரவாக நீடிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தந்தையும் மகளின் புகைப்படம் தற்போது ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை தாம் பதிவு செய்த புகைப்படங்களில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் இது என அந்த புகைப்படத்தை பதிவு செய்தவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று லாங் பீச், கலிபோர்னியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்த புகைப்படத்தை Richard Grant என்பவர் பதிவு செய்துள்ளார்.

ஒரு தந்தை தமது இளம் வயது மகளை தமது தோளிலேற்றி அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அந்த தந்தையையும் மகளையும் ரப்பர் தோட்டாக்களுக்கான துப்பாக்கிகளுடன் ஒரு பொலிஸ் குழு சுற்றி வளைக்கிறது.

ஒற்றைப் பார்வையில் கதிகலங்க வைக்கும் இந்த புகைப்படமானது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல லட்சம் மக்களால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஒற்றைப் புகைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என தாம் எண்ணவில்லை எனவும், அந்த காட்சி தம்மை உலுக்கியதாலையே தாம் அதை பதிவு செய்ததாகவும் Richard Grant தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் இருப்பது போன்று பொலிசார், அந்த தந்தைக்கும் குழந்தைக்கும் நேரே துப்பாக்கியை நீட்டவில்லை என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதையே தாமும் நம்புவதாக கூறும் Richard Grant, தமது பார்வையில் பட்டதையே புகைப்படமாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பொலிசாரால் மரணமடைந்த ஜோர்ஜ் ஃபிளாயிடுக்கு ஆதரவாக கலிபோர்னியாவில் மட்டுமே அதிக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸ், ஓக்லாண்ட், சான் பிரான்சிஸ்கோ, சேக்ரமெண்டோ மற்றும் சான் டியாகோ ஆகிய நகரங்களிலும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

1 comment:

  1. இது போன்ற பல ஆயிரம் நிகழ்வுகள் பலஸ்தீனில் சிரியாவில் ஆப்கானிஸ்தானில் ஈராக்கில் நடந்தனவே அவை யாருடைய உள்ளத்தையும் உலுக்கவில்லையே முழு உலகமும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரே அணியில்.

    ReplyDelete

Powered by Blogger.