Header Ads



அபுதாபி பட்டத்து இளவரசருடன், போப் பிரான்சிஸ் தொலைபேசியில் ஆலோசனை


அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வாடிகன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும், தடுப்பு பணியில் சர்வதேச ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டது.

அபுதாபியில் கடந்த ஆண்டு மனித சகோதரத்துவ ஆவணம் குறித்த உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் கொரோனா பாதிப்பில் இருந்து மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

அமீரக அரசு மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகள் குறித்து போப் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக மிகவும் துயரமான இந்த கால கட்டத்தில் அமீரக அரசு பெருவியன் அமேசான் நதிப் பகுதிக்கு 40 டன்கள் எடை கொண்ட மருத்துவ உதவிப் பொருட்களை அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு அனுப்பி வைத்தது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் அமீரக அரசு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை உள்ளிட்ட 68 நாடுகளுக்கு ஆயிரம் டன்கள் எடை கொண்ட மருத்துவ உதவிப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 9,63,000 சுகாதார பணியாளர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.

1 comment:

  1. Including SriLanka no one appreciate it or brought out to media. Very Shame

    ReplyDelete

Powered by Blogger.