கஞ்சிப்பான இம்ரானால் வந்த வினை
- தமிழன் E பேப்பர் -
விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க அந்த பதவியில் இருந்து அகற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு நியமிக்கப்படவுள்ளார்.
அந்த இடத்திற்கு தற்போது கொழும்பு வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.
பாதுகாப்பமைச்சு வழங்கிய இந்த இடமாற்றத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த அங்கீகாரம் இன்று அல்லது நாளை கிடைக்குமென தெரிகிறது.
-அதிரடிப்படைக்குள் களையெடுப்பு-
விசேட அதிரடிப்படைக்குள் நடக்கும் இந்த அதிரடி இடமாற்றத்திற்கு தற்போது பூஸா சிறையில் இருக்கும் பாதாள உலக தாதா கஞ்சிப்பான இம்ரானின் செயற்பாடுகளே காரணமென அறியமுடிந்தது.
மாளிகாவத்தையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரிடம் சரணடைந்த ஒருவர் , துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் கஞ்சிப்பான இம்ரானே தம்மை அதிரடிப்படையினரிடம் சரணடையுமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் இம்ரானுடன் நெருக்கமாக பழகும் யாராவது அதிரடிப்படைக்குள் இருக்கிறார்கள் என சந்தேகிக்கும் உயர்மட்டப் பாதுகாப்புத் தரப்பு அதிரடிப்படையின் மேலிருந்து கீழ் வரைஅதிரடி மாற்றங்களை செய்துள்ளது. கஞ்சிப்பான இம்ரானையும் பூசாவிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன
Post a Comment