ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது செயற்பாட்டில், மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்
முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா விசேட நிருபர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஆதரவு அலைகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.. அவர் மேலும் தெரிவிக்கையில்>
,ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சியால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர். சிறுபான்மை மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தொடர்பில் பாரிய சந்தேகம் கொண்டிருந்தனர்.
சிறுபான்மை நாடாளுமன்றஉறுப்பினர்கள் முன்வைத்த குற்றச் சாட்டுக்களே அதற்கு காரணம். ஆனால் இன்று அதனை மறுதளிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.அவர்களுடைய செயற்பாடுகளால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சிறுபான்மைசமூகத்தில் இருந்து ஆதரவு அலைகள் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்த தேசிய பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 7 பேரில் நான் மட்டுமே ஜனாதிபதி கோட்டபாய சார்பாக பிரச்சாரம் செய்திருந்தேன். ஏனைய 6 பேரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமாதாச
இருந்தார்கள். அந்தநிலையிலும் ஓரளவு வாக்குளை நாம் எமது பகுதியில் பெற்றுக் கொடுத்தோம்.தேர்தலுக்கு பிறகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது செயற்பாட்டில் மக்கள்நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
நாடாளுமன்றத்திற்கு பெரும்பான்மைக்காக ஏனைய கட்சிகளை நாம் இணைக்கும் போதுஅவர்கள் போடும் நிபந்தனைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நல்லாட்சிக்கு பங்கமாக அமையும். அதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு சென்றோம்.
ஆனால்துரதிஸ்ட வசமாக கொரோனா காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டத்துறையின் மூலம் இந்த தேர்தலை பிற்போடலாம். நாடாளுமன்றம் கலைத்தமையை பிழை என்றலாம் என மாற்றுக் கொள்கையுடைய மாற்றுக் கட்சியினர் சிலர் முயற்சித்தார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லை என சுயாதீனமாக இயங்கும் சட்டத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த தீர்ப்பு மூலம் மக்கள் விரும்புகின்ற ஒரு ஆணையை வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு திகதி அறிவித்த பின் நாம் அடுத்து தேர்தலைநோதக்கி செல்ல இருக்கின்றோம். அடுத்து வரும் பாராளுமன்றத்தை பெரும்பான்மைபலத்துடன் நிறுவ வன்னி மக்களும் ஆதரவு வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment