சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செய்முறை பரீட்சை - தனியார் துறையினருக்கு அனுமதி ரத்து
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்முறை பரீட்சையை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென மோட்டார் வாகன பரிசோதகர் சங்கம், அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறைப் பரீட்சையை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு கடந்த 2017ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment