பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் அபாயம் - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவிப்பு
இலங்கையிலும் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்திருப்பதாக கன்னொருவ விவசாய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்கும் வகையில் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் நிற புள்ளிகள் கொண்ட வெட்டுக்கிளிகளின் ஆபத்து கேகாலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பகுதிகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பகுதியிலும் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெட்டுக்கிளிகள் குறித்து முறையிட இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 1920 அல்லது 081 - 2388316 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment