ஜனாதிபதி கோட்டாபயவின் வேட்புமனுவை, நிராகரிக்க ரட்ணஜீவன் ஹூல் முயன்றார்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கடுமையான நிலைமைப்பாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் இருந்ததார் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நம்பிக்கையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கான உடனடியாக காரணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சியில் அமைச்சர் வீரவங்ச இதனை கூறியுள்ளார்.
சிங்கள மொழியில் தன்னை பற்றி எழுதப்படுவதை வாசிப்பதில்லை எனவும், சிங்களத்தில் இருப்பது குப்பைகள் என பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வீரவங்ச, ரட்ணஜீவன் ஹூலின் இந்த கருத்து அவர் தீவிரமான அடிப்படைவாதி என்பதை கட்டுவதாகவும் கூறியுள்ளார்.
Post a Comment