கருணா அம்மானுக்கு நல்லவனாக முடியும் - விமல் வீரவங்ச
புத்த பகவானைக் கொலை செய்ய முயற்சித்த தேவதத்தன் திருந்தி துறவியாக மாற முடியுமாக இருந்தால், கருணா அம்மானுக்கு தனது கடந்த கால வரலாற்றிலிருந்து விடுப்பட்டு, அதற்கு மாறான தற்காலத்திற்கு வர முடியும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் இருந்த காலத்தில் அவரை ஐந்து சதத்திற்கும் மதிக்கவில்லை.
ஆனால், விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் நிராகரித்த கருணாவை ஏற்றுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இது கருணா அம்மானுக்கு மட்டுமல்ல, துப்பாக்கியைத் தோலில் வைத்துக்கொண்டு வாதுவ ரயில் தடங்களில் சவாரி செய்யும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தில்வின் சில்வாவிற்கும் பொதுவானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது, ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கருணாவின் கருத்து தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது.
கருணா அம்மன் படையினரைக் கொன்றதாக வெளியிட்ட ஊடக அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
when you get political benefit you will tell all terrorist can become good people, but fact is you the worst disgusting criminal and terrorist in sri lanka ,
ReplyDelete