இக்பாலை மேயராக நியமிப்பதற்கு பரிந்துரை..? ரோசி நீக்கப்படுவாரா..??
கொழும்பு மாநகரசபையின் மேயராக பதவி வகித்து வரும் ரோசி சேனாநாயக்க அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரோசியை பதவி நீக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையை பிரதிநித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறிகொத்தவில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது ரோசி சேனாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பிரதி மேயராக பதவி வகித்து வரும் மொகமட் இக்பாலை மேயராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சட்ட வல்லுனர்களுடன் பேசி இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபையை பிரதிநிதித்துவம் செய்யும் 60 ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களில் 58 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என ரோசி சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post a Comment