குலைகுலையாக தொங்கும், அபூர்வரக மாங்கனிகள் - கிண்ணியாவில் ஆச்சரியம்
அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் என்பவர் மிகவும் சுவாரஸ்யமாகனவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.
இவருடைய தோட்டத்தில் பற்பல அரிதான மரங்கள் கானப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே கானப்படுவதானது பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது. கனிதராத மலட்டு மாமரத்தில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்டுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். அதில் அளவிலும் நிறத்திலும் பச்சை இன திராட்சையை ஒத்த வடிவில் குலைகுலையாக தொங்கும் அபூர்வ ரக மாங்கனிகளும் உள்ளன.
தற்கால விவசாயிகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த சாதனை திகழ்வதோடு, ஏனையோருக்கு தூண்டுதலாகவும் அமையும் எனலாம்.
இன்று சென்றாலும் நீங்களும் பார்த்து இரசிக்கலாம்.
தகவல்: MJM. லாபிர்
(0764778131)
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 27:60)