Header Ads



"நாட்டுக்கு செய்த அழிவுக்கு மைத்திரிபாலவுக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்க போவதில்லை"

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அல்ல எனவும் அவர் நாட்டுக்கு செய்த அழிவுக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்க போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி தாபரே சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வேலை செய்யக் கூடிய நிலையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியும்.

நாட்டை கட்டியெழுப்புக் கூடிய தலைவர் கோட்டாபய ராஜபக்ச என்ற நம்பிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு இருந்தது. இதன் காரணமாகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். எனினும் தற்போதைய எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் நேரத்திலேயே அவர் ஜனாதிபதியாக தெரிவானார்.

ஜனாதிபதி புதிய அரசாங்கத்தையும் பிரதமரை நியமித்தாலும் நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் காலை பிடித்து இழுத்தன. ஒரு சட்டமூலத்தை கூட நிறைவேற்ற இடமளிக்கவில்லை.

கொண்டு வரவிருந்த குறைநிரப்பு பிரேரணைக்கு என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இதனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேலை செய்யக் கூடிய அரசாங்கத்தை அமைக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தேர்தல் ஒத்திப்போனது.

எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலில் நிலையான அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதிக்கு வேலை செய்யக் கூடிய நிலைமையை மக்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த போக்கிரி அரசியல்வாதிகள் இந்த நாட்டு மக்களை மாடாக்கும் கதைகளை விட்டு விட்டு நாட்டு மக்களின் நலனகருதி இந்த நாட்டில் பல்லின மக்களின் இருப்பை உத்தரவாதப்படுத்தி நாட்டின் அமைதிக்கும் விருத்திக்கும் பாதகம் ஏற்படாதவகையில் இந்த நாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக மேன்பாடுகளை எவ்வாறு விருத்தி செய்யலாம் என்பதில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், திட்டங்களையும் முன்வைத்து மக்களின் நலன் சார்ந்த அரசியலை முன்வைத்தால் நிச்சியம் பொதுமக்கள் அதில் கவனம் செலுத்துவார்கள்.அதுதவிர பொய், இட்டுக்கட்டல், படுதூறு,கொலை, பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடல்,நயவஞ்சகத்தனமாக அரசியலை முன்னெடுத்தல் போன்ற இழுக்கான நடத்தைகளை பொதுமக்கள் கோவிட் உடன் பு​தைத்துவிட்டார்கள். எனவே, பழைய அரசியல் நடாத்த முன்வருபவர்களும் அவர்களுடைய அசுத்தமான நடத்தைகளைப் புதைத்துவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வந்தால் அது அவர்களுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும், நாட்டும் நலமாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.