Header Ads



இலங்கை வெளிவிவகார அமைச்சருடன், அமெரிக்க இராஜாங்க செயலாளர் பேச்சு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ இன்று -29- இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம், இலங்கையின் அபிவிருத்திக்கு இறைமைக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் அவர் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பான விடயங்கள், அமெரிக்காவின் இதுவரையான 6 மில்லியன் டொலர் உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மனித உரிமைக் காப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் இருவரும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக அமெரிக்க பேச்சாளர் மோர்கன் ஓர்டாகஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.