ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் கைது - சவுதிதியிலிருந்து நாடு கடத்தப்பட்டவருடன் தொடர்பாம்
கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபருடன் நெருங்கி பழகிய ஒருவர், புல்மோட்டை ஜின்னாபுரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அபுசாலி அபுபக்கர் என்ற நபருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசீமுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி, இந்த தாக்குதலுக்கு உதவியமை சம்பந்தமாக அபுசாலி அபுபக்கர் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் சவுதி அரேபியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்திய பின்னர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment