மோ சாலாஹ்வினால் குறைவடையும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள்
- Aashiq Ahamed -
உலகப்புகழ் பெற்ற எகிப்திய கால்பந்தாட்டகாரரான மோ சாலாஹ் இங்கிலாந்தின் லிவர்பூல் அணிக்கு விளையாடி வருகிறார். க்வார்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தியின் படி, லிவர்பூல் ரசிகர்களிடையே இஸ்லாமோபோபியா குறைந்து காணப்படுவதற்கு மோ சாலாஹ் காரணமாக இருக்கிறார்.
மோ சாலாஹ் அணியில் இணைந்த பிறகான லிவர்பூல் ரசிகர்களின் ட்விட்களை ஆய்வு செய்ததில், முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் கருத்துக்கள் 7.3 சதவிதத்தில் இருந்து 3.8 சதவிதமாக குறைந்திருக்கிறது. மேலும், மோ சாலாஹ்வின் மார்க்கரீதியான நன்னடத்தைகள், இஸ்லாம் மீதான ரசிகர்களின் நல்அபிப்பிராயத்தையும் அதிகரித்திருக்கிறது. பிரித்தானிய கலாச்சாரத்துடன் இஸ்லாம் ஒத்துப்போகும் என்ற எண்ணம் ஐந்து சதவிதம் உயர்ந்திருக்கிறது.
இஸ்லாமை பார், முஸ்லிம்களை பார்க்காதே என்று நாம் பிரச்சாரம் செய்யலாம். இதில் உண்மையிருந்தாலும் கூட, இங்கே பல மாற்று சமயத்தவர்களுக்கு குர் ஆனோ, ஹதீஸ்களோ முதலில் அறிமுகமாவதில்லை. நாம் தான் அறிமுகமாகிறோம். நம்மிடமிருந்து தான் அவர்களுக்கு முதல் இஸ்லாமிய வகுப்புகள் தொடங்குகின்றன. நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்வதை தாண்டி வேறு சிறந்த தாவாஹ் இல்லை. இதனை நாம் அவ்வப்போது நினைவில் வைப்பது நல்லது.
செய்திக்கான ஆதாரம்: https://qz.com/…/mo-salah-has-helped-lessen-islamophobia-i…/
'அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.'
ReplyDelete(அல்குர்ஆன் : 33:21)
Tamililquran.com
அதேபோன்று, எவர் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுகிறார்களோ அவர்களிடமும் உங்களுக்கு முன்மாதிரி இருக்கின்றது!
உண்மையில் உண்மை.....
ReplyDeleteநாம் எப்படி வாழ்கின்றோம்....
அதை சிந்தனைக்கு எடுப்போம் என்றால் எம்மிடம் நிறைய மாற்றங்கள் காணலாம்.
........
இஸ்லாம் தூய்மைப்படுத்தும்....
What a Great Person. He as a very good Muslim in his home town in Egypt. May Allah bless this young man (Mohammed Salah) and increase all his good correcter's.
ReplyDelete