பொதுமக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் - ரட்ணஜீவன் ஹூலுக்கு எச்சரிக்கை
பொதுமக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்லிடம் கோரியுள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஹூல்லின் வரலாற்றை தேடிப்பாருங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புலி ஆதரவாளர்களுக்கு உதவி செய்து செயற்பட்ட நபர். அவ்வாறான நபரின் எதிர்பார்ப்பு ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதாகும். உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டுமானால் தயவு செய்து பதவியில் வௌியேறவும்.
ஆணைக்குழுவில் இருந்துக் கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம். நாட்டு மக்களை கோபமூட்டினால் இது எங்கு சென்று முடியுமோ தெரியாது.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பொதுமக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எப்ப தேர்தல் வேண்டும் என்று கேட்டார்கள்
ReplyDeleteKara kalla kuutam.dictators group
ReplyDeleteஹுல் கெட்டவர்களுக்கு வாக்குப்போடவேண்டாம் என்றுதான் சொன்னார்.கெட்டவர்களுக்குத்தான் வலிக்கும்
ReplyDeleteஒரு பேராசிரியர் ஒருவிடயத்தை அறிவுபூர்வமாக அணுகும்போது கல்வி வாசனையற்றவன் எப்படி அதனை அணுகுகின்றான் என்பதை பொது மக்கள் தௌிவாக விளங்கிக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.
ReplyDelete