தாரிக் அஹமட் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அளுத்தகம முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸார் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்; என்று வேண்டுகோள் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஸா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மே மாதம் 25 ஆம் திகதி தர்கா டவுனைச் சேர்ந்த தர்கா நகரைச் சேர்ந்த தாரிக் அஹமட் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவத்தை எந்தவொரு மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காணரமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. அவர் பின்னர் தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பம் பொலிஸார் பிற இனத்தவர்கள் மீது காட்டும் பாகுபாட்டை அப்பட்டமாக வெளிகாட்டி நிற்கிறது. சிவில் சமூக ஒழுங்குகளைப் பாதுகாத்தல் என்பது பொலிஸாருடன் தொடர்புடையது. நாட்டின் அமைதி நிலைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மட்டுமன்றி சமூகத்தில் காணப்படும் பொதுவான அநீதிகளை இல்லாதொழித்தல், அச்சங்களை நீக்குதல், மக்களுடைய அடிப்படைத் தேவைகளை உத்தரவாதப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களில் நேர்மையுடன் செயலாற்றக் கூடிய பொலிஸார் தற்போது பாகுபாடுகளுடன் நடந்து கொள்வதைப் பார்க்கின்ற போது மனதிற்கு பெரும் கவலையையும் சந்தேகத்தையும் உண்டு பண்ணியுள்ளது.
பொலிஸார் எந்தவொரு மனிதனாக இருந்தாலும் சரி புத்திசாலித்தமான முறையில் அணுகி மனிதாபிமான தன்மையுடன் செயற்பட வேண்டும். தாரிக் அஹமட் மீது தாக்குதல் நடத்திய குறித்த பொலிஸார் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பொலிஸாரின் அடக்கு முறையினையும் வன்முறையினையும் பாகுபாட்டையும் இல்லாதொழித்து பொது மக்களின் நிலையான பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை வழங்க அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Can the Police manhandle a person?
ReplyDeleteIf the answer is no then they are street rowdies
PAIYAN PATTA KAAYAM AARIPPOCHI SIR.
ReplyDeleteIPPATHAAN THHONGI VILITHEERKALAA.
CANDIDATE VERA. ARIVIRUKKA????