ஜார்ஜ் கெஞ்சியும் காப்பாற்றாமல் வேடிக்கை, பார்த்த பொலிசாருக்கு என்ன தண்டனை..?
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் சக பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த போது, அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெயிலுக்கான தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழக்கக் காரணமான Derek Chauvin என்ற பொலிஸ் அதிகாரி மீது மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது, அவர் மீது இரண்டாம் நிலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மொத்தம் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனால் அவர், 40 ஆண்டுகள் வரை சிறையில் செலவிடவேண்டி வரலாம் என்று கூறப்பட்டது, அதே போன்று குற்றவாளியை விட குற்றத்திற்கு துணை போனவர்களுக்கு, அல்லது குற்றத்தை கண்டும் காணாமல் விட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வகையில், Derek ஜார்ஜின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும்போது அதை தடுக்காமல், ஜார்ஜ் கதறியதை கண்டுகொள்ளாமல் விட்ட மற்ற மூன்று பொலிசாருக்கும் அதே அளவில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.
Thomas Lane, J.A. Kueng மற்றும் Tou Thao என்னும் அந்த மூன்று பொலிசாரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வழக்கில் முக்கிய குற்றவாளியான Derekஐப் போலவே மற்ற மூவரும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட இருப்பதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று பொலிஸ் அதிகாரிகள், வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் ஜாமீன் 1 மில்லியன் டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இவர்கள் மீது கொலைக்கு உதவுதல், மற்றும் இரண்டாம் நிலை படுகொலைக்கு உதவுதல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவர்களுக்கான அடுத்த விசாரணை ஜுன் 29-ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
US சிறைகளில் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் தண்டணை அனுபவிப்பவரகளுக்கு சிறந்த உணவு வசதிகளுடன் வேறு பல வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாக அறிகின்றோம். அந்த வகையில் இந்த நாய்களுக்கு 40 வருடங்கள் என்ன 80 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம்.
ReplyDelete