எம்முடன் பயமின்றி இணையுங்கள், சிறிகொத்தாவை மக்கள் ஆணையுடன் பிடிப்போம் - சஜித் சூளுரை
(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மக்கள் இறைமை என்பன பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவையும் மக்கள் ஆணையுடன் பொறுப்பேற்போம் என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று -09- செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நான் கலந்து கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான ஆதரவுடனேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும் , பிரதமர் வேட்பாளராகவும், வேட்பாளர் நியமனக் குழுவின் தலைவராகவும் நான் நியமிக்கப்பட்டேன்.
இவ்வாறான நிலையில் எமது வளர்ச்சியை தடுப்பதற்காக சில சதிக்காரர்களினால் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி பதிவு செய்யப்படாத கட்சி எனக் கூறப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டாம் எனக் கூறப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே செல்லுபடியற்றது என்று கூறப்பட்டது.
பின்னர் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் நியமனங்கள் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டவை என்று கூறப்பட்டது. இவ்வாறு பல சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொய் தோற்கடிக்கப்பட்டு உண்மை வெற்றி பெற்றுள்ளது.
தற்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புடன் மக்கள் நீதிமன்றத்தை நாடப் போகிறோம். அதன் மூலம் ஜனநாய வெற்றியைப் பெற்றுக் கொள்வோம். எமக்கு உயர்மட்டத்தினருடன் எவ்வித அரசியல் சார் இரகசிய ஒப்பந்தங்களும் கிடையாது. எமக்கு மக்களுடன் மாத்திரமே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று காணப்படுகிறது.
எனவே ஐக்கிய மக்கள் சக்திக்கென தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது. மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நாம் செயற்படுகின்றோம். எனவே மக்கள் பொதுத் தேர்தலில் உண்மையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். பயமின்றி அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுகின்றோம். பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் அவர்களின் ஆசியுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவையும் பொறுப்பேற்போம் என்றார்.
SIRIKOTHAVAI KAIPATRI, ATHIL THHONGAVRNDUM ENRU KANAVU KANDUKONDU
ReplyDeleteIRUPPATHEI, INDA SHINNAMOOLAYIN NOKKAM.
MAKKALUKKU, MANVILUNDAALUM
PARAVAAILLAI