Header Ads



சில அரசியல்வாதிகள் வெற்றியீட்டினாலும் தங்கள் ஆசனங்களை இழக்க வாய்ப்பு


முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் திருப்பி அனுப்பப்படாத 05 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை உடனடியாக கைப்பற்ற இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று -30- செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,

குறித்த வாகனங்கள் மார்ச் 02 ஆம் திகதியே கையளிக்க வேண்டியிருந்தபோதும், இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைக் கையளிக்கத் தவறிவிட்டனர் என அவர் தெரிவித்தார்.

தற்போது இராஜாங்க அமைச்சர்கள் இல்லாததால், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ வாகனங்களை மீண்டும் கையளிக்க வேண்டும் வேண்டும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அவை சட்டத்தை மீறியமை நிரூபிக்கப்பட்டால், தேர்தலைத் தொடர்ந்து அந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆசனங்களை இழக்க வாய்ப்பு உள்ளது என மேலும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.