புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர்
மார்ச் மாதத்தில் புலியாக இருந்த கரோனா வைரஸ் தற்போது காட்டு பூனையாகி வலுவிழந்துவிட்டது என்று இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி இத்தாலியில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவராக உள்ளார்.
நீண்ட நாட்களாக கரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், கரோனா வைரஸ் வலுவடைந்துவிட்டதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேட்டியோ பாஸ்செட்டி கூறும்போது, “ வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச் , ஏப்ரல் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் கரோனா புலியாக இருந்தது ஆனால் தற்போது காட்டு பூனையாகிவிட்டது. தற்போது 80 வயதை கடந்தவர்கள் கரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் கரோனா வலிவிழந்துவிட்டது, விரைவில் கரோனா தானாகவே மறையக் கூடும்” என்றார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை அதன் இயல்பு வாழ்கையிலிருந்து நகர்த்தியுள்ளது.
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மார்ச் மாதத்தில்அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலியில் கரோனா தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
Post a Comment