ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான, மனு விசாரணையின்றி நிராகரிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிட் கட்டளையொன்றை வௌியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் இணக்கத்தின் பேரில் மனு பரிசீலனையை இன்று மேற்கொள்ள மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்தது.
குறித்த மனு கடந்த 22 ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்தவிருந்த நிலையில் பிரதிவாதிகளில் சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் வரையில் உயர்நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment