Header Ads



தடைசெய்யப்பட்ட நாடுகளில், இலங்கை சேர்க்கப்படவில்லை - ஐரோப்பிய ஒன்றியம் விளக்கம்

ஐரோப்பிய நாடுகளிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட, தற்காலிக தடை நீக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இடம்பெறாதமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விளக்கமளித்துள்ளது.

அனுமதியளிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இடம்பெறாததை தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது என கருதக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிற்கு அத்தியாவசியமற்ற பயணத்தினை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இடம்பெறாததை தெளிவுபடுத்தி இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவும், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வெற்றிகரமான நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை பாராட்டியுள்ளது.

உள்ளக எல்லைகளை திறக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்றுவரும் நிலையில் ,வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போக்குவரத்தை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறாத நாடுகளுடனான எல்லைகளை திறப்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தனியுரிமைக்குரிய விடயம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 எந்த நாடுகளிற்கு எல்லையை திறக்கலாம் என்பது குறித்த ஆரம்பகட்ட பட்டியலை தயரிக்கும் நடவடிக்கையில் இணங்குவது குறித்து உறுப்புநாடுகள் இணைந்து முயற்சியை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள் தொற்றுநோய் நிலை மற்றும்,சம்பந்தப்பட்ட நாடுகளுடனான பரஸ்பர வாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இது தீர்மானிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

15 நாடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தே ஆராயப்படுகின்றது இது ஆரம்பகட்ட நடவடிக்கை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் நாடு ஒன்று இடம்பெறாததை தடைசெய்யப்பட்ட நாடுகளில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது என கருதக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.