சீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு
சீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சீனாவில் சீனர்கள் தவிர்த்து பிற சமுதாயத்தவர்கள் ஒடுக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கும் நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் வாய் மொழி வார்த்தைகள், அரசு ஆவணங்கள் என அந்த செய்திகள் உண்மைதான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சீனாவில் பிரபலமான பண்டிகை Han திருவிழா. இந்த திருவிழாவின்போது பன்றி இறைச்சியால் ஆன ஒரு உணவுப்பொருளை உண்பது பாரம்பரியம்.
இந்த பண்டிகைக் காலங்களில் அரசு அதிகாரிகள் Xinjiang என்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
அப்பகுதி இஸ்லாமியர்கள் முதலான சிறுபான்மையினர் வாழும் பகுதி. அங்கு செல்லும் அரசு அதிகாரிகள் இஸ்லாமியர்களை இந்த பன்றி இறைச்சியாலான உணவை உண்ண வற்புறுத்துகிறார்களாம்.
இஸ்லாமியர்களுக்கு பன்றி இறைச்சி விலக்கப்பட்ட உணவு என்பதால், அதை அவர்கள் உண்ண மறுக்க, அவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்களாம். அங்கே அவர்களுக்கு ’சீன கலாச்சாரம்’ கற்றுக்கொடுக்கப்படும்! இது ஒரு சிறு உதாரணம்தான்...
இதுபோக, மறைமுகமாக சீன அரசு இஸ்லாமியர்களை ஒழித்துக்கட்ட சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்.
அவை என்னவென்றால், முதலாவது அதிக குழந்தை பெற்றுள்ள இஸ்லாமியர்களை சிறைக்கு அனுப்புவது, எத்தனை பிள்ளைகளோ அத்தனை ஆண்டுகள் சிறை... குழந்தை பிறந்தால் அபராதம்..
எல்லாவற்றிற்கும் மேலே கட்டாயக் கருத்தடை! பெண்களை தொடர்ந்து வந்து பரிசோதிக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு கருக்கலைப்பு செய்வது, கட்டாய கருத்தடை செய்வது என பல பயங்கரங்கள் நடைபெறுகிறதாம். இதுபோக, மற்ற சீனர்களுக்கு சலுகைகள் கொடுத்து Xinjiangக்கு வரவழைக்கிறதாம் அரசு.
அவர்கள் வந்து இஸ்லாமியர்களின் இடத்தை ஆக்ரமித்துக்கொள்வார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், இனி இஸ்லாமிய குழந்தையே பிறக்ககூடாது என்பதற்காக மற்ற சீன சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திருமணம் செய்யும் சூழ்ச்சியும் நடக்கிறதாம்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சீன அரசு எங்களவர்களை ஒடுக்குகிறது, எங்களை ஒடுக்கிக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் நாங்கள் காணாமல் போகும் வரை எங்களை ஒடுக்க அரசு விரும்புகிறது என்கிறார்.
ஒரு வகையில் இது ஒரு மறைமுக இனப்படுகொலை என்கிறது ஜேர்மனியை மையமாகக் கொண்டு இயங்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு ஆதரவான The World Uyghur Congress என்ற அமைப்பு.
Post a Comment