Header Ads



வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில், ஆளும்கட்சியின் கன்னி பிரசாரக் கூட்டம்


(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை நடத்தவதற்கான திகதி ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி  என ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டம்  தொடர்பான விபரங்கள் அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள சுகாதார பாதுகாப்பு  அறிவுறுத்தல்களை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது மக்களும் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதொரு செயற்படாகும்.

பொதுத்தேர்தலுக்கான கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவினால் வகுக்கப்பட்டுள்ளது.

வகுக்கப்பட்ட  திட்டங்களை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுப்பதே எமது  நோக்கம். பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டம் தொடர்பில் அடுத்தவாரம்  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தனது கன்னி கூட்டத்தை வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுர நகரில் நடத்தியது. அதுவே  ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு  பிரதான ஆசிர்வாதமாக அமைந்தது. பொதுத்தேர்தலுக்கான கன்னி கூட்டத்தையும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் நடத்த  அதிக  கவனம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிரச்சார மற்றும் தேர்தல் தொடர்பான  நடவடிக்கைகளின் போது பின்பற்ற  வேண்டிய  நடவடிக்கைகள் அனைத்தும் பொதுத்தேர்லிலும் பின்பற்றப்படும். சுற்றுசூழலுக்கு பாதிப்பு, பிறருக்கு சேறு பூசாத வகையில்  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.

No comments

Powered by Blogger.