யுக புருஷரை தலைவராக தெரிவுசெய்தும், அவருக்கு வேலை செய்யும் பின்னணியை உருவாக்காமல் இருப்பது அநீதியானது
பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்றம் இல்லாத காரணத்தினால், அவரது பதவிக்காலத்தின் 10 வீதம் வீணாகி போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளர்.
கொழும்பில் இன்று -08- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச 60 மாதங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலத்தில் 10 வீதம் தற்போது முடிந்து விட்டது.
நாட்டை கட்டியெழுப்பக் கூடிய யுக புருஷரை தலைவராக தெரிவு செய்தும், அவருக்கு வேலை செய்ய முடியும் பின்னணியை உருவாக்காமல் இருப்பது எந்தளவுக்கு அநீதியானது.
இது அதி கூடிய வெளிச்சத்தை தரும் மின் பந்தத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு மின் கலங்களை போடாது இருளில் இருப்பது போன்றது.
இதனால், ஜனாதிபதி பலமிக்கவராக மாறி, 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக அவருக்கு உதவக் கூடிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு இருக்கும் உரிமையை தொடர்ந்தும் தள்ளிப்போட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணைக்குழுவிற்கு நினைவூட்ட விரும்புவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு விஞ்ஞான அடிப்படையும் அற்ற, யாருக்கும் ஒரு சதத்துக்கும் பெறுமதியும் அற்ற முடிவான ஜனாஸாக்களை எரிக்கும் முடிவால், உலகின் நான்கில் ஒரு பகுதியினரான பெறுமதியான 180 கோடி முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதித்த ஒருவரை யுக புருஷர் என்பதிலிருந்து உங்கள் வட்டத்தின் அறிவுச் சூன்யத்தை என்னென்பது?
ReplyDeleteசரியாகச் சொல்லிவிட்டீர்கள். இந்த அரசாங்க கொள்கைகளின் அடிப்படை பொய்யும்,களவும் தான். நாட்டில் மேற்கொள்ளப்படும் அத்தனை சிறிய பெரிய திட்டங்கள்,முன்னேற்றம்,அபிவிருத்திகளின் மூல அடிப்படை பொய்,களவு.இந்த இரண்டு மூலாதாரங்களின் அடிப்படையில் வெற்றி பெற்ற ஒரு அரசாங்கம் உலகில் இருக்கின்றதா என இதன்பிறகு தான் நாம் தேடிப்பார்க்க வேண்டும்.
ReplyDelete