Header Ads



மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும், இலங்கையர்களை அழைத்து வருவதில் அசமந்தப் போக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை  எமது நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகளில்  அசமந்தப் போக்கு காணப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி  அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக  குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஸா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்லின் போது எமது வெளிநாட்டிலுள்ளவர்களை எமது நாட்டின் வீரர்கள் எனக் கோரி அவர்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசாங்கம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எங்களுடைய மக்களை எமது நாட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை தேர்தல் முடிவடையும் வரை நிறுத்தியுள்ளதாக தகல்கள்; தெரிவிக்கின்றன. எமது நாட்டு மக்களை உடடினாயக  அழைத்து வருவதற்கு அரசாங்கத்திடம் எமது ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் வெளிநாடுகளிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளிடம் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இணங்க பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எமது மக்கள் வருடத்திற்கு பாரியளவிலான டொலர்களை எமது நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.  உதாரணமாக கடந்த வருடம் டொலர் பிலியன் 7க்கும்  மேற்பட்ட   அதிகளவிலான நிதியைக் கொண்டு வந்தார்கள். எங்களுடைய நாட்டுக்கு முழுமையான ஏற்றுமதியின் மூலமாக எமது நாட்டுக் திரைசேரிக்கு கிடைக்கும் வருமானம் டொலர் பிலியன் 11 ஆகும். அதேவேளை வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் மூலமாக டொலர் பிலியன் 7. 8 க்கும் அதிகளவிலான வருமானம் பெறுகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் வீரர்கள் என வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசாங்கம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எங்கள் மக்களை எமது நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தேர்தலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  நம்பத் தகுதந்த வட்டாரங்கள் மூலமாக தெரிவிக்கப்படுகிறது.  

இந் நாட்டிலுள்ள சூழலில் முறைப்படி வெளிநாட்டிலுள்ளவர்களை நாட்டுக்குள் அழைத்து வந்தால் தமக்கு தேர்லிலின் போது பாதிப்பு ஏற்படும்  என அரசாங்கம் நினைக்கிறது. கொவிட் 19 கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கப்படுமாயின் அரசாங்கத்திற்கு பாதிப்பு அதிகம் ஏற்படலாம் எனக் கருதி தேர்தலின் பின்னர் வெளிநாட்டிலுள்ளவர்களை அழைத்து வரும் கால எல்லை நீடிப்பதற்கான  தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்படும் தகவல்களுக்கு  எதிராக எமது கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

தற்போது நமது நாட்டில் மக்கள் செல்லும் சகல விமான போக்குவரத்துச் சேவைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் 17 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் இருந்து ஒரு தொகையினரை அழைத்து வருவதற்கு விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  அதன் பின்னர் எமது நாட்டவர்களை அழைத்து வருவதற்கான எந்தவொரு விமானங்களும்  தயார் செய்யப்பட வில்லை.

தினசரி கொவிட் 19 கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகையை குறைக்த்துக் காட்டுவதற்காக வெளிநாட்டிள்ள எங்களுடைய மக்களை இந்நாட்டுக்கு அழைத்து வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக எமக்குத் தகவல்கள் தெரிக்கின்றன. சாதாரணமாக எமது நாட்டவர்கள் 17 இலட்சம் பேர் அளவில் வெளிநாடுகளில் சேவை புரிகின்றார்கள். வருடத்துக்கு இரண்டு இலட்சம் பேர் அளவில் வெளிநாட்டு வேலைக்காக செல்லுகிறார்கள். அந்த வகையில்  இந்த கால கட்டத்தில் எமது நாட்டவர்கள் 35000 பேர் அளவில் தொழில் வாய்பை இழந்து நிற்பதாக அறிகின்றோம். இந்நேரத்தில் இலங்கை அரசாங்கம் என்ற வகையில் எங்களுடைய மக்கள் என்று பார்க்க வேண்டிய தேவை  இருக்கிறது . அவர்களும் எங்கள் நாட்டு மக்கள் என அரசாங்கம் மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கதிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.