Header Ads



மோசமான பேராசையால் நாட்டுக்கு செய்யும் அநியாயம், இவர்கள் மீது இடிவிழும்

அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையோ இறக்குமதி செய்ய வேண்டும்.

அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ள இவர்களுக்கு இருக்கும் சுயநலத்தை பாருங்கள். மோசமான பேராசையால் நாட்டுக்கு செய்யும் அநியாயம். இவர்கள் மீது இடிவிழும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அய்யா நீங்கள்தான் அப்போது மிகம் நல்ல அரசு என கொக்கரித்தீர்கல் இப்ப என்ன ஆனது? அது சரி பாகிஸ்தானில் இருந்து பசு இறக்குமதி செய்தால் நீங்கள்தான் முதலில் அதற்கு எதிராக பேசுவீர்கல்.நாட்டு மக்களுக்கு உங்களின் அனைத்து சித்து விளையாட்டும் இப்போது தெரியும்.இனி நடிப்பு எடுபடாது.

    ReplyDelete
  2. பாகிஸ்தான் பசுவில் ஹலால் பால் வரும்

    ReplyDelete
  3. UNNUDAYA PECHUKALAI MAKKAL
    IPPOLUTHU KAALIL PADUKINRA
    THOOSIKU KOODA KANAKKEDUPPATHILLAI.
    KAARANAM, NEE ORU THUESHAM
    PIDITHAVAN.

    ReplyDelete

Powered by Blogger.