தீய சக்தியின் சதித் திட்டத்தை முறியடித்து வெற்றிகொள்வோம் - நஸீர்
எதிர்கொள்ளப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் களமிறக்கப்பட்டுள்ளதனால், வேட்பாளர்களிடையே காணப்படுகின்ற போட்டித்தன்மையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரதேசவாத விஷக் கருத்துக்களை வெளியிடும் பணியில் பல சதிகாரக் கும்பல் செயற்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களிடையே பிரதேசவாதத்தினை விதைத்து ஊர் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டுமெனவும் ஏனையவர்களுக்கு வாக்களிக்குமிடத்து எமது பிரதிநிதித்துவம் பறிபோகலாம் எனக்கூறி அச்சத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு எமது பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் நாடகங்களை மிகவும் கச்சிதமான முறையிலே அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, மக்களாகிய நீங்கள் வாக்களிக்கின்ற போது இச்சதிகளை முறியடிக்கும் வகையில் எமது வேட்பாளர்கள் யாருக்கேனும் 3 தெரிவுகளை பயன்படுத்தி நமது சமூகத்தையும், மண்ணையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
எம்மக்கள் வாக்களிக்கின்றபோது ஒரு தெரிவுடன் மாத்திரம் வாக்களித்துவிடாமல் கட்சிக்கும், எம் சமூகத்திற்கும் துரோகமிழைக்காது தீய சக்கிதியினரின் சதித் திட்டங்களை முறியடித்து எம் சமூகத்தின் உரிமைக் குரலை வெற்றிகொள்ள ஓரணியின் கீழ் ஒன்று திரழ்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீய சக்திகளின் கூட்டமே நீங்கள் தானே. அதுக்குள்ள மண் என்ன. கல் என்ன? அனைத்துமே சாக்கடை தான்.
ReplyDelete