சிறிகொத்தா குழப்பத்திற்கு, ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் - அகிலவிராஜ் குற்றச்சாட்டு
ஐக்கியதேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று -08- இடம்பெற்ற தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களிற்கு ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சம்பவங்களிற்கு ஐக்கியமக்கள் சக்தியே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க உறுப்பினர்களை கண்காணிப்பதற்காக நாங்கள் நபர்களை அனுப்பினோம், தொழிற்சங்க உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையலுவலகத்திற்கு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைவரின் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது. ஐக்கியதேசிய கட்சியின் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருந்தவேளை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட தொடங்கிய பின்னரே குழப்பநிலை உருவாகியது
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் கோசங்களை எழுப்பியதன் காரணமாக உரையாற்றிக்கொண்டிருந்தவர்கள் உரையை நிறுத்திக்கொண்டுவெளியேற வேண்டிய நிலையேற்பட்டது.
இதன் காரணமாக ஐக்கியதேசிய கட்சியின் தொழிற்சங்க கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது
Bluddy rotten mentality of Ranil has done all damages to the UNP which has nothing but a laughing stock in the country. All these damages have focused on the narrow mindedness, and power hungry of Ranil.
ReplyDelete