Header Ads



சஜித்தான் இன்னமும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - தேர்தல் வெற்றியின்பின் பொற்காலம் உதயமாகும்

சஜித் பிரேமதாச உட்பட அவரது தலைமையிலான அணியினர் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியினரே எனவும் சஜித் பிரேமதாசவே தற்போதும் அந்த கட்சியின் பிரதித் தலைவர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது எனவும் புதிய கூட்டணியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதால் கட்சியில் விலகுவதாக அமையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

திறமையான, மக்களை அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபடும் நபர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர். பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொற்காலம் உதயமாகும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியினரை கட்சியில் இருந்து கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, அந்த இடங்களுக்கு புதியவர்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Ha ha ha.. ivar iadaikkidai vandu sirippu kaattikkittu...

    ReplyDelete

Powered by Blogger.