கருணாவை கைது செய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருந்தமை சம்பந்தமாக அவரை கைது செய்து தண்டனை வழங்குமாறு கோரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை செய்வதற்காக இன்று காலை கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தினரை கொலை செய்ததை கருணா அம்மான் மிகப் பெருமையாக பேசியதாகவும் அவர் தற்போது சமூகத்திற்குள் தலைவர் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருப்பதாகவும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கருணா அம்மானுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை இராணுவத்தினரே வழங்கி வருவதாகவும் தான் செய்த குற்றத்தை தனது வாய் மூலம் கூறியிருந்தால், அதனை விட வேறு சாட்சியங்கள் எதற்கு எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment