சவுதி முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்பு
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் யாத்ரைக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சவூதி அரேபிய அரசு அறிவித்திருப்பதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன.
சவுதி அரேபியாவுக்கான ஜிபூட்டி குடியரசின் தூதர் தியா எடின் பாமக்ராமா கூறும்போது, “தற்போது கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில், தொற்றிலிருந்து, பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. என்று ஐக்கிய அமீரகத்தின் ஹஜ் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரசும் சவூதி அரசின் முடிவை வரவேற்றுள்ளது. சவுதி அரசின் இந்த முடிவு இரண்டு காரணங்களுக்காக வரவேற்கத்தகுந்தது. ஒன்று ஹஜ்ஜை முற்றிலும் ரத்து செய்யவில்லை. அதேசமயம் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து ஹஜ்ஜுக்கு வருவதை தடுத்துள்ளது’. என்று கூறினார்.
பஹ்ரைன் அரசும் சவுதியின் முடிவை வரவேற்றுள்ளது. பாதுகாப்பான ஹஜ் பயணத்தை உறுதி செய்வதில் சவுதி அரசு காட்டும் முன்னைப்பை பஹ்ரைன் பாராட்டியுள்ளது.
கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில் இந்த ஆண்டு வெளிநாடுகளிலிருந்து ஹஜ் செய்ய சவுதி வரும் பயணிகளுக்கு சவூதி அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேசமயம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு ரமலான் பெருநாள் தொழுகை மசூதிகளில் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
Post a Comment