ஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகுவதே, முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு வழிவகுக்கும்
தற்போது நாட்டை நிர்வகிக்கும் பொதுஜன பெரமுனவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்து, ஆட்சியில் பங்காளர் ஆகுவதே முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு வழிவகுக்குமென தேசியப் பட்டியல் பாராளுமன்ற நியமன பட்டியலில் இடம்பெற்றுள்ள மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் 8 முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர். நானும், அலி சப்ரியும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளோம்.
எனது பேருவளைத் தொகுதியில், மேலும் 3 முஸ்லிம்கள் வேறு கட்சிகள், சார்பாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பேருவளை முஸ்லிம்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். அதாவது பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய, கட்சிகளுக்கு வாக்களித்து அவர்கள் என்ன பெற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதாகும்.
ஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகுவதே, முஸ்லிம் சமூகத்தின் முதன்மைத் தெரிவாக இருக்க வேண்டும். அப்போது அபிவிருத்தியையும், உரிமை மறுப்பு விடயங்களையும் பக்குவமாக பேசி நமது சமூகம் பயனடைய முடியும்.
இப்படித்தான் பதியுதீன் மஹ்மூத், அலவி மௌலானா, பளீல் ஹாஜியார் உள்ளிட்டவர்கள் செயற்பட்டனர். இதுவே சாதூரியத்தனமான செயற்படாகும் எனவும் மர்ஜான் பளீல் மேலும் தெரிவித்துள்ளார்.
It is now the duty of the "NEW POLITICAL LEADERSHIP" of the SLPP/SLFPA to help the Muslim Vote Bank to create that culture, Insha Allah. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in August 2020 with our Muslim representatives, as partners, Insha Allah. That is why "The Muslim Voice" felt there was a need to immediately call a "Meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with Attorney-at-Law (Brother Ali Sabri) as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join in this mission. THIS WILL STRENGTHEN THE POSITION of Brother Attorney-at-Law Ali Sabri and Brother Marjan Faleel in the National list of the SLPP very much and even help Brother Attorney-at-Law Ali Sabri to seek for a "CABINET" position, because HE. Gotabaya Rajapaksa and PM Mahinda Rajapaksa are with him, Insha Allah.
ReplyDeleteThe Muslim Vote Bank should also have a UNITED VISION to work with, and it is now the duty of the "New Muslim Political Hierarchy" of the SLFP/SLPP - SLFPA Allaince to lead this "VISION" Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
முஸ்லிம்கள் தங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்க முன்பு, பதியுதீன் மஹ்மூத் அவர்களின் காலத்தையும் தற்போதைய நிலைமைகளையும் நன்கு கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தையும் நன்கு ஆலோசனை செய்து தான் வாக்களிக்க வேண்டும்.
ReplyDeleteதகனம் செய்வோருக்கு வாக்களிப்பது තහනම්.
ReplyDeleteமர்ஹூம் பதியுத்தீன் மஹ்மூத் மார்க்கப்பற்றுள்ள, சமூகப்பற்றுள்ள ஆளுமைமிக்க அரசியல்வாதி. அவர்களுடைய காலம் வேறு. இப்போதிருக்கும் காலம் வேறு. சகல மட்டங்களிலும் இனவாதம் விதைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம்களின் தேசப்பற்றை உரசிப்பார்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேசிய கட்சிகளிலிருந்து விலகி ஒரே அணியாக நின்று பாராளுமன்றத்தில் அணிசேராமல் சுயாதீனமாக செயல்பட்டு எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவளிக்க வேண்டும். நாம் வெல்ல வேண்டியது மக்களின் மனங்களேயன்றி அரசியல்வாதிகளின் மனங்களையல்ல.
ReplyDeleteVelangidum..... Illaatti vimosanam illayo...? Mind it we r also SRILANKAN... We have rights to vote to anyone and we are not beggars in this country idiots...!!
ReplyDelete