Header Ads



சகல இலங்கையர்களிடமும், நான் வேண்டிக்கொள்வது இதுதான்

கவனயீனமாக செயல்பட்டால் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூலில் அவர் விடுத்துள்ள தகவல்களில்,

உலகின் அனைத்து நாடுகளும் நோய் தொற்றினால் அவதியுறும் நிலையில், எமது நாடு நம் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியினால் குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம், 

இருந்தபோதிலும் கொரோனா நோய்த் தொற்றானது முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும். 

கவனயீனமான செயற்பாடுகள் நோய்த்தொற்றை மீண்டும் பரப்பக் கூடும். 

எனவே, சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்றாக பின்பற்றுமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.