மஹிந்தவின் தமாஷ் - தேசியப்பட்டியல் கிடைக்குமென தெரிந்திருந்தால் எனக்கும் ஒன்றை கேட்டிருப்பேன்
முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா..அதாவது முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ள கடந்த 3 ஆம் திகதி பதுளை சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்தவேளை பல்வேறு விடயங்களை பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சந்தித்த மஹிந்த ” ஹா ஹரீன் எப்படி சுகம்…உங்களுக்கென்னப்பா…தேசியப் பட்டியலில் எம் பியாக போகிறீர்கள்…இப்படி தேசியப்பட்டியல் கிடைக்குமென தெரிந்திருந்தால் எனக்கும் ஒன்றை கேட்டிருப்பேன்…” என்று தமாஷாக கூறினாராம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் அணியில் இம்முறை தேசியப்பட்டியலில் ஹரீனின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா இடதுசாரி கொள்கை கொண்டவர் என்றபடியால் தனது இறுதிக்கிரியைகளை பெரிய எடுப்பில் நடத்தக் கூடாதென இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னரே கடிதம் எழுதி வைத்தவர் என்பதால் அவரது விருப்பப்படியே அவை நடந்தன.சவப்பெட்டியை கூட குறைந்த செலவில் வாங்குமாறு ஆவர் கோரியிருந்தபடியால் அதுவும் அப்படியே செய்யப்பட்டது.தொழிலாளர் பாடல்களை ஒலிபரப்பி தனது பூதவுடலுக்கு சிவப்பு நிற சட்டையை அணிவித்தே அடக்கம் செய்யவேண்டுமென்ற அவரின் இறுதி ஆசையும் நிறைவேற்றப்பட்டது.
– ஆர்.சிவராஜா –
Post a Comment