இலங்கையில் கொரோனா பாதிப்பு குறைய காரணம் இதுதான் - மாலை மலர் பத்திரிகை வெளியிட்ட செய்தி இதோ
இலங்கையில் பொது இடங்களில் சமூகஇடைவெளி, கைகழுவுதல் மற்றும் மக்கள் முககவசம் அணிதல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்ததால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை. அங்கு மொத்தம் 1,950 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது. இதனால் அங்கு 2 மாத ஊரடங்கு அமலில் இருந்தது. கடந்த மாதம் தான் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதிக்கு பின்னர் அங்கு சமூகபரவல் இல்லை. பொது இடங்களில் சமூகஇடைவெளி, கைகழுவுதல் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் முககவசம் அணிதல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்ததால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
அங்கு நேற்று மட்டும் 28 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,526 ஆக உயர்ந்துள்ளது. 424 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.
Post a Comment