உலக ரீதியில் கொரோனா நோயாளிகள், விரைவாக குணமடையும் நாடுகள் பட்டியலில் இலங்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடையும் நாடுகளில் இலங்கை முன்னணி உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை, உலகின் மிக முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை 56.86 வீதத்தில் உள்ளது.
உலகில் அதிக கொரோனா மரணங்களை பதிவு செய்த அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் நூற்றுக்கு 38.56 வீதத்திலும், பிரேசிலில் 43.88 வீதத்திலும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் மரணங்கள் மிகவும் குறைந்த நாடுகள் பட்டியலிலும் இலங்கை முன்னணி இடம் வகிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் 0.59 வீதம் என்ற மிக குறைந்த அளவாகும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்கால இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை ஒரு விளையாட்டு போல போய் விட்டது.
ReplyDeleteஇது தொடர்பான விழிப்புணர்வு செயற்த்திட்டங்களை இளைஞ்சர்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.