கொழும்பு முஸ்லிம் மக்கள் யானையை விட்டு, வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை
பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்திலுள்ள மக்களிடம் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்ட சூழலில் ஒரு பிடி சோறு சாப்பிட்டார்களா எனக் கேட்காத ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு இத்தேர்தல் ஒரு பரீட்சைக் களமாகும். கொழும்பில் மத்திய தேர்தல் தொகுதியிலுள்ள மக்கள் அவருக்கொரு சிறந்த பாடத்தைப் படிப்பிப்பார்கள். தேர்தல் முடிவுகள் அவருக்குத் தெளிவான செய்தியைக் கூறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதி அமைப்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு முஸ்லிம் மக்கள் யானையை விட்டு வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை. மக்கள் இன்று வரையிலும் எந்த தடமாற்றமுமில்லாமல் 99 விகிதமான மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பவர்களே இருக்கிறார்கள். திகனக் கலவரம் நடைபெற்ற போது அவர் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார். இன்று எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார்.
ஒரு முக்கியமான பதவி வகிப்பவர் பொதுவாக ஒரு சிறுபான்மையின மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் அம்மக்களுக்காக ஏன் குரலெழுப்ப முடியாமல் இருக்கிறார். இன்று 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் தான் இருக்கிறார்கள். அதே போன்று எமது சகோதர சிறுபான்மையின தமிழ் மக்கள் கூட சஜித் அணியுடன் தான் கையோர்த்து இருக்கிறார்கள்.
கொரோனா தொற்றுத் தொடர்பில் முஸ்லிம்களுடைய மையத்தை தகனம் செய்யும் விடயமாக இருந்தாலும் சரி அல்லது அவர்களுடைய பொருளாதார நெருக்கடியான பிரச்சினையாக இருந்தாலும் சரி சுமார் இரண்டரை மாதம் நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில் மக்கள் தொழிலை இழந்து வருமானமின்றி கொழும்பு முஸ்லிம்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொழும்பில் வாழும் முஸ்லிம்கள் அன்றாடம் தொழில் செய்து அந்தக் குறிப்பிட்ட சிறிய வருமானத்தில் வாழக் கூடியவர்கள்தான் அதிகளவு இருக்கிறார்கள். அவர்களுடைய பொருளாதார நெருக்கடியின் உச்ச வெளிப்பாடாக மாளிகாவத்தையில் மூன்று உயிரைப் பலி கொடுக்க நேர்ந்த சம்பவத்தை நாம் நன்கு அறிவோம்.
வீதியோரங்களில் சிறு கடைகளை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாகவும் கொழும்பில் வாழும் முஸ்லிம்கள் உள்ளனர். இந்த மக்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதா எந்தவிதமானதொரு குரலையும் எழுப்ப வில்லை. ஏனென்றால் எதிர் கட்சித் தலைவர் என்பது சாதாரணமான சொல் அல்ல. ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை சர்வதேச உலகம் மதிக்கின்ற பதவியாகும். இப்படிப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வந்து பொருளாதார ரீதியில் சிக்குண்ட சிறுபான்மையின மக்களுக்கு என்ன மனிதாபிமான உதவிகள் செய்தார். என்ன குரல் கொடுத்தார். அத்தோடு உலக நாட்டுத் தலைவர்களுடன் இம்மக்கள் தொடர்பில் என்ன கருத்துக்களை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் வெளிப்படைய அறிந்து கொள்ள வேண்டும். எதிர் கட்சித் தலைவர் என்ற பதவியில் மட்டும் இருந்தால் போதாது. பெயரளவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டும் போதாது. நாட்டு மக்கள் மனதை வென்ற ஒர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்.
அவர் அம்பாந்தோட்டையில் 2000 ஆம் ஆண்டில் இருந்து பாராளுமன்றம் பிரவேசித்தவர். இம்முறை கொழும்பில் மத்திய தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காகக் களமிறங்கி இருக்கிறார். இவ்வளவு காலமும் அவர் பிறந்து வளர்ந்த சுச்சரித்த இடத்திற்கு ஒரு நாள் வந்து பார்த்திருப்பாரா? அவர் பிறந்து வளர்ந்து இடம் இன்னும் இருக்கிறது. கொழும்பு மத்தியில் வாழைத் தோட்டத்திலுள்ள அவரது வீடு இன்று வரைக்கும் மூடப்பட்டு இருக்கிறது. ஒரு நாள் வந்து அந்த மக்கள் என்ன செய்கிறார்கள். அந்த மக்கள் சாப்பிட்டார்களா? என எட்டிபார்க்க வரவில்லை.
அந்த தோட்டத்தில் 65 விகிதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மத்திய தேர்தல் தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதால் மத்திய கொழும்பு மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அறிந்திருக்க வேண்டும். அவர் ஒரு எதிர்கட்சித் தலைவர் மட்டுமல்ல அவரொரு கட்சியுடைய தலைவர். இது வரையிலும் அங்கு வாழும் மக்களைப் பற்றிப் பேசி இருக்கிறாரா? இந்த கொரோனா தொற்றுக் காலப் பகுதியில் அந்த மக்கள் என்ன சாப்பிட்டார்களா என்று பார்த்தாரா?
நடைபெறவுள்ள இத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி இரு கூறுகளாக பிரிந்துள்ள சூழலில் சஜித் பிரேமதாச எதிர்பாராத முடிவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இல்லாவிட்டால் ரனில் அவர்கள் ஏதோ ஒரு பிடி சோறு சாப்பிட்டிர்கலா? என மக்களிடம் கேட்டார் போலும்,இலங்கையில் உள்ள மிக பலவீனமான ஒரு அரசியல்வாதிதான் திரு.ரனில்.
ReplyDeleteWhat yu do..! first
ReplyDeleteதங்களது வாழ் நாள் பூராகவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்பு முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி இதுவரை என்ன அபிவிருத்தி பணிகளை செய்துள்ளது ?பச்சை நிறத்தைக்காட்டி அவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் .
ReplyDeleteஇப்படியே சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி உங்கள் வாழ்க்கை சுபீட்சமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
ReplyDeleteஇது இவரது தவறான, என்பதை விட பிழையான கணிப்பு அல்லது நப்பாசை என்பதுதான் கொழும்பு வாக்காளன் என்ற வகையில் எனது கணிப்பு?
ReplyDelete