முகவர்களே இந்த, அநியாயத்தை செய்யாதீர்கள்
ஒரு மூன்று வயது குழந்தை உட்பட அந்தத் தாய்க்கு மூன்று பிள்ளைகள்.
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு சென்றிருக்கிறாள்.
அரசாங்கத்தின் எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல், யாரோ ஒரு கள்ள முகவர் அந்த மூன்று பிள்ளைகளின் தாயை வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கிறான்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தில் இருந்து கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளுடன் 01.06.2020 குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றோம்.
தொழில் செய்யக்கூடிய ஆரோக்யமான நிலையில் இருக்கும் கணவன், 16 வயது நிரம்பிய ஒரு திடகாத்திரமான மகன், 14 வயதி நிரம்பிய ஒரு மகள், ன்று வயதைத் தாண்டும் ஒரு பெண் குழந்தை.
இதுதான் அந்தப் பெண்ணின் குடும்பம்.
வறுமையில்தான் வாழ்கிறார்கள், ஆனால் அதற்காக அந்த பெண் வெளிநாடு செல்ல ண்டிய கட்டாயத்தில் அந்தக் குடும்பம் ல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்படி தாய்மார்கள் ணிப் பெண்ணாக வெளிநாடு சென்று ல்ல நிலைக்கு வந்த குடும்பங்கள் மிகக் குறைவு.
அவர்கள் அங்கே பிள்ளைகளுக்காக கஷ்டப்படுவார்கள்.
இங்கே பிள்ளைகள் சீரழிந்து கொண்டு இருப்பார்கள்.
மூன்று வயதுக் குழந்தை 14 வயது அக்காவிடம் ளர்கிறது.
இந்த Sub Agent காரர்கள் றுமையில் வாழும் வீடுகளுக்கு சென்று, வர்களுக்கு பணத்தைக் காட்டி, ஆசையை ளர்த்து, போலியான ஆவணங்களை யாரித்து வெளிநாடுகளுக்கு எப்படியாவது ண்களை அனுப்பிவைத்து டுகிறார்கள்.
இவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் செல்வதனால் நாளை இவர்கள் தொழில் செய்யும் நாட்டில் ஒரு பிரச்சினை வந்தாலும் இவர்களுக்கு உதவி செய்ய யாரும் வரப்போவதில்லை.
தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பியவர், தனது குழந்தைகளை அப்படியே போட்டுவிட்டு வெளிநாடு சென்றவர், போலியான ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர், இவர்கள் அனைவரும் அவர் அவர் செய்த துரோகங்களுக்கான ஏற்ப பிரதிபலன்களை அனுபவிப்பார்கள்.
ஆனால் தனது தாய்க்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தனது அக்காவின் தோளில் தூங்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது...?
safwan basheer
safwan basheer
Post a Comment