யார் இவர்கள்..? எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..??
ஒண்ணுமே புரியலைப்பா?
- வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க
- புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க!
- லாக் டவுன் பண்ணாலும் சோறு, தண்ணி குடுக்கிறாய்ங்க!!!
- கடைசில கொரோனா காலத்திலும் இந்த #பாய்ங்கதான் சொந்த பநதமெல்லாம் ஓடி ஒளிஞ்சிகினு;
- தொட்ராதீங்க!
- தும்மிராதீங்க!
- தொடச்சிராதீங்க!
- கை கொடுத்துராதீங்க!
- அங்க ஒரு கொரோனா பேஷன்ட், சுத்தி போங்க!!!
என்று எட்டி நின்னு
- பெற்ற பிள்ளைகளும்,
- இரத்த சொந்தங்களும்,
- உற்றார் உறவினர்களும்
- அருகில் வர
- அழுது தீர்க்க
- அடக்கம் செய்ய
மறுக்கும் வெகுஜன மக்களுக்கு மத்தியில் எப்படி இவர்களுக்கு மட்டும் இந்த அசாதாரண தைரியம் வந்தது ?
சதா சர்வ நாட்களும் ஸ்டரச்சர தூக்கிகிட்டு space man உடையோடு உலாவி மரணித்த அனைத்து மத மக்களையும் மனிதாபிமான உணர்வோடு, வழியனுப்பி வைக்கும் இவர்கள்
- உயிர்மேல் பயம் இல்லாதவர்களா?
- உயிர்வாழ விரும்பாதவர்களா?
- ஆசைகள் அற்றவர்களா?
- மனைவி, மக்கள் இல்லாதவர்களா?
- பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், இல்லாதவர்களா?
- பாசமற்றவர்களா?
- பைத்தியக்காரர்களா?
- கூலிக்கு மாரடிப்பவர்களா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
முடிந்தால் ஒரு நாள் உடையை (spaceman jacket) களைந்த உடன், அருகில் சென்று பாருங்கள், தெரியும்.
அந்த ஒவ்வொரு மனிதனுக்கும்
- வயதான பெற்றோர்கள்
- காலேஜ் போக தயாராக உள்ள மக்கள்/உடன்பிறப்புகள்
- அடுத்த வேளை குடும்ப உணவுக்கு வழியில்லா நிலை
- உடல்நிலை குன்றிய உறவு
- நாமும் வாழ்க்கையில் உயர்நிலை வரனும் என்ற ஏக்கம்.
- ஆசைமொழி
- ஏக்க பெருமூச்சு
என்று நம் எல்லோரையும் போல் ஒரு பட்டியலே இருக்கும்..
எல்லாவற்றையும் இரண்டாம்பட்சமாக்கிவிட்டு, #கொரனோ_நோயோடு_மரணித்தவர்களை இறுதி கடமையை புரிய அன்றாடம் தங்களுக்கும் அந்த நோய் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையிலும், முன்னெடுத்துச் சென்று நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம்/தகனம் செய்யும் இவர்களே #அல்லாஹ்வின்_பாதையில் உயிர்தியாகம் செய்ய தங்களை அர்ப்பணிக்கும் தற்கால #ஜிஹாதிகள்
இவர்களை பார்த்து அல்லாஹ் கூறுகிறான்
குர்ஆன் 2:207
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
இப்பணிபுரிபவர்கள் யாரும் முகம் தெரிய பணி செய்பவர்கள் அல்ல! ஆனாலும் அவர்களை அணுகி, ஏம்ப்பா இந்தப் பணி பண்ற? என்று கேட்டுப்பாருங்க!
ஒற்ற வரில பதில் வரும்.
அல்லாஹ் கூலி தருவான்.
நோய் வந்தால் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் , பாய் எங்க போய் கூலிய பெறுவார் என்று தெரிய வேண்டுமென்றால்...
நீங்க #குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை உங்கள் (முஸ்லிம்) நண்பர் மூலம் வாங்கி படிக்கனும், நீங்கள் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால்
நீங்க முஸ்லிமாக இருந்தால், காலைல கண்முழித்ததும் உங்கள் மனைவியிடமோ, பெற்றோரிடமோ நான் நாளையில இருந்து கொரோனோ நோயில மரணித்தவர போய் அடக்கம் பண்ணும் சமுதாயப் பணிக்கு போகப்போறேன்னு சொல்லுங்க....
சொல்லுமுன், நீங்க எப்படியெல்லாம் வாழனும்னு கணவு கண்டுகொண்டீர்களோ அதை ஒரு முறை நினைத்துபார்த்துவிட்டு..... சொல்ல வாய் வருதா என்று பாருங்கள்...
அப்படியே சொன்னாலும் உங்களை ரூமிலே போட்டு பூட்டி (locked down) அல்லது அழுது ஒப்பாரி வைச்சி ???
இப்பத்தெரியும்
அல்லாஹ்வின் பாதையில் உயிர் அர்ப்பணிப்பு என்றால் என்னவென்று.....
நீங்களும் தன்னலமற்ற (சமுதாயப் பணியில்) அல்லாஹ்வின் பாதையில் உயிர் அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமென்றால்...
மீண்டும் #குர்ஆனை_புரட்டுங்கள் தெளிவு பெறுவதற்காக....
இயக்கம் சார்ந்து/சாராத அல்லாஹ்வுக்காக கொரோனோவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் (தன் உயிரை பணயம் வைத்து அறப்பணி செய்யும்) அனைத்து தன்னலமறியா அந்த அன்பு உள்ளங்களை நினைவு கூர்ந்து இந்தப்பதிவு.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!
- காஜா மைதின் -
உண்மைதான். முழுக்க முழுக்க உண்மைதான். முஸ்லிம்கள் கூலி பெறாமல் எந்தத் தொழிலையும் செய்வது இல்லை. ஆனால் அவரகள் மனிதர்களிடம் இருந்து தாங்கள் புரியும் அர்ப்பணத் தொழிலுக்காக கூலி வசூலிக்கவே மாட்டார்கள். அவரகளுடைய எஜமானனே அவரகளுக்கு அத்தகைய பணிகளுக்கு கூலி கொடுக்கப் போதுமானவன்.
ReplyDeleteameen
ReplyDeleteAlhamdulillah Ameen Ameen Yarabbahameen.
ReplyDelete