Header Ads



தொண்டர் சேவை படைத் தளபதியாக, மேஜர்ஜெனரல் பன்ஸ ஜாயா நியமனம்


இலங்கை இராணுவ தொண்டர் சேவையின் 42ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் பன்ஸ ஜாயா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈழம் யுத்தத்தில் 57ஆவது படைப்பிரிவின் பிரதி கட்டளையிடும் ராணுவ தலைமையகப் பணிப்பாளர்; நாயகம் கெமுனு சேவா பலகாயா அதிகாரியாகவும் பணிபுரிந்த இவர், கடந்த முதலாம் திகதி புதிய பதவியை ஏற்றுள்ளார். சீதாவக்க, கொஸ்கமவில் இப்படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது.

மேஜர் சுராஜ் பன்ஸ ஜாயா சீனத்தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டதாரிப் பட்டம் பெற்றதோடு, களனிப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ரணவிக்கிரம, ரணசூரப் பட்டங்களைப் பெற்ற இவர், 35 வருட இராணுவ சேவையுள்ளவருமாவார். கொழும்பு சென். பேனடிக்; கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

No comments

Powered by Blogger.