Header Ads



கொழும்பிலிருந்து மன்னார் சென்ற பேருந்தில் தங்கக்கட்டிகள்

கொழும்பில் இருந்து மன்னாருக்கு 109 கிராம் தங்கக்கட்டியை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்கம் ஒரு மில்லியன் வரையில் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய மன்னார் பகுதியில் வசித்து வரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.