குருநாகல் பகுதியிலிருந்து, மாத்தறைக்கு பறந்த வெட்டுக்கிளிகள்
குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், தற்போது மாத்தறை மாவட்டத்தில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை-பூருகமுவ மற்றும் வளகந்த பகுதிகளில் இருந்து இவ்வகை வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பதலேகொட அரசி ஆராய்ச்சி நிறுவன உதவி பணிப்பாளர் எஸ்.ஆர்.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், கடந்த (செவ்வாய்க்கிழமை) மாவனல்லை – அத்னகொட பிரதேசத்திலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெட்டுக் கிளிகள் மரவள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் இனம் இல்லையென விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் இங்க சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒரு வகையான பட்டாம்பூச்சி இனங்களும் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment