போராக்கள் இலங்கை வருவதால் பிரச்சினையில்லை - அரசின் நம்பக தன்மைக்கு சான்றிதழாக அமையும்
இந்தியாவில் இருந்து வருகைத்தர உள்ள போரா ஆன்மிக தலைவர் பேராசிரியர் சயிதினா சயிபுதின் உள்ளிட்ட 45 பேருக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்க உள்ளதன் மூலம் சுகாதார முறைமைகள் மீறப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அத்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
அவ்வாறான மதத்தலைவர்களில் ஒருவர் நாட்டிற்கு பிரவேசிக்க விருப்பம் வெளியிட்டுள்ளதன் மூலம் அரசாங்கம் மற்றும் சுகாதார முறைமைகள் தொடர்பிலான நம்பக தன்மைக்கு சான்றிதழாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரா ஆன்மிக தலைவர் பேராசிரியர் சயிதினா சயிபுதின் உள்ளிட்ட தரப்பினர் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆமா, வைரஸை கொண்டு வந்து பரப்பி விட்டா அதுக்கும் நாமதான் சம்பலாகனும்.
ReplyDeleteசெய்யிதினா சைபுதீன் அவர்கள் தற்போதைய பிரதமரின் மிக நெருங்கிய நண்பரும் கூட்டாளியும் கூட. எனவே அவர் இலங்கையில் தங்குவதில் ஆட்சிப்பரம்பரைக்கு பெருமை. டொலர் நாணயத்தாள்களினால் தலைவரைப் போர்த்திவைப்பார். என்ன உறவு.
ReplyDelete