அல்லாஹ்வின் இல்லங்களுக்கு, செல்லத் தயாராகுவோம் - இமாம்களுக்கான வழிகாட்டல்கள்
கொரோனா அபாய அச்சுறுத்தல் காரணமாக 2020-03-15 ம் திகதி முதல் மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிவாயல்களும் 3 மாதங்களின் பின்னர் எதிர்வரும் 2020 ஜூன் 15 ம் திகதி மீண்டும் திறக்கப்படும் போது பள்ளிவாயல் இமாம்களுக்கு இலங்கை இமாம்கள் மன்றம் வழங்கும் விஷேட வழிகாட்டல்கள்
1) பள்ளிவாயல் நிர்வாக சபை செயலாளரை தொடர்பு கொண்டு உங்களது பயணத் திகதியை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2) சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி உங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
3) பள்ளிவாயலுக்கு நீங்கள் சென்றாலும் 14 முதல் 21 நாட்கள் வரை உங்களை நீங்களே பள்ளிவாயலுக்குள் கட்டுப்படுத்தி தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
4) அத்தியவசிய தேவைகளுக்கு வெளியே செல்வதாயின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வெளியே செல்லுங்கள்.
5) மஹல்லா ஜமாஅத்தினர்களுடன் சமூக இடைவெளி பேணி தமது தொடர்புகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
6) யாருடனும் முஸாபஹா மற்றும் முஆனகா செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள்.
7) வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக கட்டுப்படுங்கள்.
8) ஐங்கால மற்றும் ஜும்ஆ தொழுகை போன்ற கூட்டு வழிபாடுகளை மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
9) பள்ளிவாயல் நிர்வாகங்களுக்கு உங்களது பூர்த்தியான பங்களிப்பை வழங்குங்கள்.
10) குர்ஆன் மற்றும் மக்தப் வகுப்புகளை சுகாதார அறிவுறுத்தல்களை பேணி நிர்வாகத்தின் அனுமதியுடன் நடத்துங்கள்/சமூக வலையத்தளங்களை பயன்படுத்தி நடத்துங்கள்.
11) பள்ளிவாயலில் நடைபெறும் தனி வழிபாடுகளின் போதும் சமூக இடைவெளி பேணும் விடயத்தில் மேற்பார்வையாளராகவும் ஆலோசகராகவும் செயற்படுங்கள்.
12) மஹல்லா ஜமாஅத்தினருடனும் சக ஊழியர்களுடனும் அன்பாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் நடந்து கொள்ளுங்கள்.
13) பள்ளிவாயலின் சூழல் சுற்றாடலை கவனிப்பதோடு தமது அறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
14) பள்ளிவாயல் ஊழியர்களுக்கு பள்ளிவாயலுக்கு அனுப்பப்படும் உணவு ஏற்பாடுகளின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளை நிர்வாகங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுங்கள்.
அல்லாஹுதஆலா எமது முயற்சிகளையும் தியாகங்களையும் ஏற்றுக் கொள்வானாக
தலைவர்
அஷ்-ஷேக் பௌசுல் அமீர்(முஅய்யிதி)
செயலாளர்
அஷ்-ஷேக் மபாஸ்(ஹாமிதி)
இலங்கை இமாம்கள் மன்றம்
Post a Comment