பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது நாட்டு மக்கள், புதிய தகவலொன்றை தெரிந்துகொள்ள முடியும் - டலஸ்
(செ.தேன்மொழி)
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவர்களுக்கு மத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் நாட்டின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் புதிய தகவலொன்றை தெரிந்துக் கொள்ள கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கல்வி அமைச்சு வைரஸ் பரவலினால் பாடசாலை மாணவர்கள் பாதிப்படைய கூடும் என்பதினால் , மூன்று கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இன்று திங்கட்கிழமை முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது பாடசாலைகளை அதிபர்கள் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர் குழுவினர் மற்றும் காரியாலய முகாமைத்துவ பிரிவனர் மாத்திரம் அவர்கள் கடமைபுரியும் பாடசாலைகளுக்கு சென்று ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விடயங்கள் ஒழுங்கான முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் , கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய உரிய விதிமுறைகளை பின்பற்றி செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்த பாடசாலையின் நிர்வாக குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.
பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததுள்ளார்.
Post a Comment