Header Ads



அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்காது - ரத்தன தேரர்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தால், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், தங்களது ஆதரவில்லாது, அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்த முடியாதநிலை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

காலி - ஹபராதுவ பிரதேசத்தில் நேற்ற (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், நாட்டில் பெரும்பான்மையான மக்கள், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றும் தற்போது நாட்டில் ஐ.தே.க என்ற கட்சி இல்லாதுபோயுள்ளது என்றும் கூறினார்.

நாட்டில் டீல் (ஒப்பந்த) அரசியலே முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மாறி மாறி ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறார்கள் என்றும் மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடியை, அனைவரும் மறந்துவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

புதிய அணியொன்றாலேயே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று கூறிய தேரர், 6 மாதங்களுக்குத் தேர்தலைக் காலந்தாழ்த்திவிட்டு, ஜனாதிபதி தலைமையில் நாட்டுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தான் ஆரம்பத்திலேயே கூறியதாகவும், அப்படிச் செய்திருந்தால், நாட்டுக்கு தேவையான பாதையை ஒன்றிணைந்து உருவாக்கியிருக்க முடியுமென்றார்.

1 comment:

Powered by Blogger.