சீனாவுக்கு எதிராக கொழும்பில் நடத்தவிருந்த போராட்டத்தை தடை செய்த நீதிமன்றம்
சீன தூதகரத்துக்கு முன்னால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
காவல்துறையினர் சமர்ப்பித்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை இன்று -08- பிறப்பித்துள்ளது
கொரோனவைரஸ் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார நட்டத்துக்காக சீனா நட்டஈட்டை வழங்கவேண்டும் என்றுக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் ஜூன் 10 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.
எனினும் காவல்துறை ஜூன் 8, 9, மற்றும் 10ஆம், 11ஆம் திகதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு எதிராக தடையுத்தரவை பெற்றுள்ளது.
தேசிய நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் முழுமையாக சுகாதார அதிகாரிகளின் ஒழுங்குவிதிகளின்கீழ் நடத்தப்படும் என்றும் பொதுசுகாதார அதிகாரிகள் தமது ஆர்ப்பாட்டத்தை நேரில் வந்து கண்காணிக்க முடியும் என்றும் இயக்கத்தின் தலைவர் ரஞ்சித விதானகே தெரிவித்துள்ளார்.
எதைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டிருப்போம். ஆனால் என்ன காரணம் கொண்டும் சீனாவுக்கு சீ என்று ஒரு வார்த்தையேனும் சொன்னால் அதை நாம் கடைசிவரை பொறுக்க மாட்டோம்.
ReplyDelete