Header Ads



மது விற்பனை நிலையங்களில், பெண்களை பணிக்கு அமர்த்துவதா? பெப்ரவரியில் விசாரணை

மது உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை இடங்களில் பெண்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான மீள்திணிப்பை. தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 60 வருடங்களாக இருந்த பெண்களுக்கான இந்த தடையில் 2018ம் ஆண்டு தளர்வு கொண்டுவரப்பட்டது.

இதனை ஆட்சேபித்து பல சமூக நடவடிக்கையாளர்களும், சிங்கள நடிகை சமனலி பொன்சேகாவும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவைத் தாக்கல் செய்தனர்.

இன்று -30- மனு பரிசீலனைக்கு வந்தபோது அதன் விசாரணையை எதிர்வரும் பெப்ரவரியில் நடத்துவதற்கு மன்று தீர்மானித்தது.

மதுபான உற்பத்தி இடங்களிலோ அல்லது விற்பனையகங்களிலோ பெண்களை சட்டபூர்மாக பணிகளுக்கு அமர்த்துவதை தடுக்கும் சட்டத்தை மாற்றியமைக்க முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கோ அல்லது அரசுக்கோ சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் பிரகடனம் செய்யவேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

No comments

Powered by Blogger.